Friday, October 10, 2025

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

கவிதை

ருசி

Buy Love Birds Art, Pen and Ink Art, Bird Illustration, Love Birds Painting, Colorful Bird Artwork, Minimalist Bird Art Online in India - Etsy

இந்தப் பறவைக்கு வேகமாகப்
பறக்க உதவும் தன் சிறகுகள் குறித்து
எவ்விதப் பெருமிதமும் இருந்ததில்லை
பழத்தின் கடினமான விதை
ஓடுகளை உடைக்கும் அதன்
அலகின் வலிமையை ஒருபோதும் வியந்ததில்லை
அந்தரத்தில் மிதக்கும் கனமற்ற  உடலின்
கச்சிதத் தன்மைக்காக அது கர்வப்பட்டதுமில்லை
காலை அதை ஒரு வேட்டைக்காரன் சுட்டபோது
அதற்கு வலித்தது ஆனாலும் அதற்கு
கவலைப்படத் தெரியவில்லை
இவையெல்லாமும்கூட
காரணமாக இருக்கலாம்
என் உணவுத்தட்டில் இருக்கும்
இந்தப் பறவையின் மாம்சம்
ருசியாக இருப்பதற்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *