எழுத்தாளர் கரிகாலன்
கடலூர் மாவட்டத்தில் மணிமுத்தாறு, வெள்ளாறு, எனும் இரண்டு நதிகளுக்கும் இடையே உள்ள மருங்கூர் எனும் கிராமத்தில், 1965 ஆம் ஆண்டு ஜூலை 28 இல் பிறந்தவர் கரிகாலன். பெற்றோர், இரத்தினசபாபதி, இராசலட்சுமி.
இவரது தந்தை ஆசிரியராகவும் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
கரிகாலனின் இலக்கிய ஆர்வத்தை இளம் வயதிலிருந்து ஊக்குவித்தவர்.கரிகாலன், ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும், கல்வி இயலில் இளங்கலையும் பயின்றவர். அரசுப் பள்ளி ஆசிரியர்.
இவரது மனைவி சு.தமிழ்ச்செல்வி. திருவாரூர் மாவட்டம் கற்பகநாதர்குளத்தில் பிறந்தவர். பெற்றோர், சுப்ரமணியன், முத்துலட்சுமி. தமிழின் முன்னணி எழுத்தாளர்.
அரசுப் பள்ளி தலைமையாசிரியர்.மூத்த மகள் சிந்து. மருத்துவத்தில் எம். எஸ் (பொது) பட்டம் பெற்றவர். தற்போது பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
மருமகன் மருத்துவர் சபியா. ஒடிஸாவைச் சேர்ந்தவர். தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிகிறார். பெயரன், வியன்.
இன்னொரு மகள் சுடர். இவரும் மருத்துவர். எம். எஸ் (பொது) பட்டம் பெற்றவர். தற்போது கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிசெய்கிறார்.
மருமகன் டாக்டர் பிரகதீஷ்வரன். மயக்கவியல் நிபுணர். சென்னை குளோபல் மருத்துவமனையில் பணிசெய்கிறார். பெயர்த்தி, ஆழி.மகன் கார்க்கி. சென்னை அறிவுசார் சட்டப் பள்ளியில் சட்டம் (ஹானர்ஸ்) பயின்றவர். தற்போது குர்காவுனில் உள்ள கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயில்கிறார்.
கரிகாலன் எழுதியுள்ள நூல்கள் ;
கவிதைகள்
1.புகைப்பட மனிதர்கள் (களம் புதிது )
2. அப்போதிருந்த இடைவெளியில்
(களம் புதிது)
3. புலன் வேட்டை (ஸ்நேகா)
4. இழப்பில் அறிவது (ஸ்நேகா)
5. தேவதூதர்களின் காலடிச்சத்தம் (மருதா)
6. ஆறாவது நிலம் (மருதா)
7. அபத்தங்களின் சிம்பொனி (புதுமைப்பித்தன்)
8. கரிகாலன் கவிதைகள்
(உயிர் எழுத்து)
9. பாம்பாட்டி தேசம் (சால்ட்)
10. மெய்ந்நிகர் கனவு (டிஸ்கவரி)
11. தாமரை மழை (நான்காவது கோணம்)
12. செயலிகளின் காலம் (டிஸ்கவரி)
13. உயிர் நன்று, சாதல் இனிது (படைப்பு)
14. மகள் வீடு திரும்பும் பாதை (வேரல்)
15. கிரின்ஞ் (வேரல்)
16. பிக்காஸோ ஏன் அழுகிறார் (வேரல்)
17. நாஸ்தென்கா வாழ்ந்த ஊர் (முழுத்தொகுப்பு , வேரல்)
நாவல்
1. எக்ஸ் (வேரல்)குறுங்கதை1. எக்ஸிசம் (படைப்பு)சினிமா1. திரையும் வாழ்வும் (வாசகசாலை)
2. திரையும் வாழ்வும் – பாகம் 2 (படைப்பு)
3. தெய்வத்திண்டே திர (படைப்பு)
4. சமகால மலையாள சினிமா(படைப்பு)
சங்க இலக்கியம்
1. என்மனார் புலவர் (படைப்பு)
2. நோம் என் நெஞ்சே (படைப்பு)
3. அகத்தொற்று (படைப்பு)
பண்பாட்டுக் கட்டுரைகள்
1. தையலைப் போற்றுதும் (உயிர் எழுத்து)
2. துயில் கலைதல் (படைப்பு)
3. இடர் ஆழி நீங்குக (வேரல்)
கவிதை இயல் நூல்கள்
1. நவீன தமிழ்க் கவிதையின் போக்குகள் (மருதா)
2. கீழ்ப்படிய மறுக்கும் சொற்கள் (வேரல்)
3. அர்த்தங்களிலிருந்தும் விடுதலை
(தமிழ்ப்பல்லவி)
விருதுகள்:
கரிகாலன் தனது இலக்கியப் பங்களிப்புகளுக்காக கதா விருது,
ஏலாதி இலக்கிய விருது, சுஜாதா அவார்ட்ஸ், தி.ஜா நினைவுப் பரிசு,
ஜெயந்தன் நினைவு விருது, வே.சபாநாயகம் நினைவு விருது, போன்ற பெருமைகளைப் பெற்றுள்ளார்.
இவரது சில கவிதைகள், ஆங்கிலம், மலையாளம், இந்தி, வங்க மொழிகளில் வெளியாகியுள்ளன.களம் புதிது சிற்றிதழின் ஆசிரியராகவும், நான்காவது கோணம் இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டிருக்கிறார்.
சிறந்த கவிஞர்களுக்கு களம்புதிது விருது வழங்கி வருகிறார். ஊராகாலி , எனும் இவரது சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஜெ.என்.யு பல்கலைக் கழகத்தின் மொழிபெயர்ப்புத் துறையின், பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்தது. பண்பாடு, கலை, நுண் அரசியல் வெளிகளில் தொடர்ந்து இயங்கிவருகிறார். உலகத் திரைப்படங்கள் குறித்து வெகுசன இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். இலக்கியம் பண்பாடு சார்ந்த இவரது சமூக ஊடகப் பங்களிப்புகள் பயனுடையவை.