Description
நவீன எழுத்து குறித்து பேசவந்த பின்நவீனத்துவ சிந்தனையாளர் ழீன் பாட்ரிலாட், பாரம்பரியமாக மதிக்கப்படுவதன் ஆழம், ஒத்திசைவு, அர்த்தம், அசல் தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகிய குணங்கள் வெற்று அடையாளச் சுழலின் மத்தியில் வெளியேற்றப்படுகின்றன அல்லது கலைக்கப்படுகின்றன என்கிறார். இதன் அடிப்படையில் ஆளுமைகள், சமகால இளம் எழுத்தாளர்கள் குறித்த நுண்சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளது. அபத்தமாக வாழ்வதன் மூலம்தான் இந்த எல்லையற்ற அபத்தத்திலிருந்து வெளியேற முடியும் என்கிறார் ஜூலியோ கொர்டசார். இவரது சொற்களின் உந்துதலில்தான் இந்நூலுக்கு ‘அர்த்தங்களிலிருந்தும் விடுதலை’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது.



