Description
சிறுகதைகளில் கலைஞர் பல்வேறு நவீன உத்திகளைக் கையாண்டிருக்கிறார். கடித வடிவத்தில் ஒரு கதையை எழுதியிருக்கிறார். அவரது ஒரு கதையில், கதை சொல்ல வருகிறவரே அந்தக் கதையின் பாத்திரமாக மாறிவிடுகிறார். குப்பைத் தொட்டி ஒரு கதை சொல்கிறது. கலைஞரின் கதைகளில் வருகிற குப்பைத் தொட்டி, அணில் குஞ்சு, பருந்து அனைத்தும் உருவகங்களாக மாறிவிடுகின்றன. குப்பைத் தொட்டி சிறுகதையை, ஹைப்பர் ரியாலிட்டி கதையாக வாசிக்க முடியும். இத்தகு கதைகளில், அதிக உண்மையா? அல்லது, யதார்த்தத்தைவிட நமக்கு தேவைப்படும் உண்மையா? எனும் இடைவெளியை மங்கவைக்கிறார் கலைஞர்.

