Description
எல்லா மனிதர்களும் விடுதலையாக வாழ விரும்புகிறார்கள். ஆனால் முடியவில்லை. எது மனித வாழ்வுக்கு ஆதாரமான தேவையாக இருக்கிறதோ, அதை மனிதர்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டியிருக்கிறது. ஓர் இளைஞன் ஒரு யுவதியை அன்பு செய்கிறான். அவள் வேறு சாதியாக இருந்தால் அவ்விருவரும் அவ்வன்பை ரகசியமாக வைத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. தேசத்தை, மொழியை, இனத்தை, நேசிப்பவர்கள், அவை விடுதலைபெற வேண்டுமென விரும்புகிறவர்கள், அதற்கான வேலைகளை ரகசியமாக செய்ய வேண்டியிருக்கிறது. இதுதான் ‘ரகசிய சுடர்’. கவிதை என்பது ஒரு ரகசிய சுடர்தான். அது வாசிப்பவரின் அந்தரங்கத்தில் ஒளியேற்றுகிறது.




