Monday, April 20, 2026

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

கவிதை

செவ்வேள்

குறிஞ்சி நிலக் காதலன் முருகன்
அவனை அரசியல் அடியாளாக்கத் துடிக்கிறது ஆர். எஸ். எஸ்
வேல் ஓர் உழவுக் கருவி
அதை கொலைக் கருவியாக
முனைகிறது அமித்ஷா கூட்டம்
இசுலாமியருக்கு எதிரணியில்
நிறுத்த முருகன் இந்துவல்ல
‘சூர்க்கொன்ற ராவுத்தனே’
அருணகிரிநாதர் பாடிய
சமத்துவத் தமிழன்
‘சுருளிமலை மீது மேவும் சீலா’
பாடிய காதர்பாஷாக்களை
பகைவராகவா கருதுவர்
முருக பக்தர்
பாண்டிச்சேரியில் வேலனுக்கு
கோவில் எழுப்பினார்
பச்சைத் தமிழர் முகம்மது கவுஸ்
பாபர் மசூதி இடித்த காவிகளால்
தமிழர் ஒற்றுமையைச்
சிதைக்க முடியாது
பெட்ரோல் ஊற்றி
தீபம் ஏற்றுவது பக்தியால் அல்ல
தமிழகத்தை இருளாக்கும்
சனதான சதி என்பதறிவோம்
தாய்நிலம் ஒளிர
எண்ணெயை அல்ல
குருதியை நிரப்பி
தீபம் ஏற்றவும்
தமிழர் துணிவோம்
நீங்கள் நினைப்பதுபோல்
முருகன் ஒருவனல்லன்
காவி இருள் கொளுத்த
கோபத்தில் முகம் சிவக்கும்
ஒவ்வொரு தமிழரும் செவ்வேள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *